சிரித்ததற்காக ஒருவர் கைது!
இது போல் எங்காவது கேள்விப்பட்டதுண்டா? இங்கிலாந்தில் மேற்கூறியது குறித்த வழக்கொன்று நீதிமன்றத்துக்கு வந்தது!
ஒரு நிறைமாத கர்ப்பிணிப்பெண் பேருந்தில் பயணித்தபோது ஓர் இளைஞன் தன்னைப் பார்த்து புன்னகைப்பதைக் கண்டு, தன் நிலைமை குறித்து வெட்கமும், சற்றே அவமானமும் அடைந்தாள். அதனால், தன்னுடைய இருக்கையை விட்டு விலகி வேறிடத்தில் அமர முற்பட்டபோது, அவன் புன்னகை சிரிப்பானது! மறுபடியும், இன்னும் சற்று நகர்ந்து வேறொரு இருக்கைக்கு இடம் பெயர்ந்தாள். அவ்விளைஞனின் சிரிப்பு அப்போது அடக்க முடியாத இடிச்சிரிப்பு ஆனதால், அப்பெண் கோபமுற்று, காவலரை அழைத்து அவனை கைது செய்ய வைத்தாள்.
அவ்வழக்கை விசாரித்த நீதிபதி அவன் அவ்வாறு ஒரு பொது இடத்தில் நடந்து கொண்டதற்கான காரணத்தை வினவினார். இளைஞன் கூறிய பதில் கீழே:
" ஐயா, அந்த கர்ப்பிணிப்பேண் பேருந்தில் ஏறியபின் அமர்ந்த இருக்கைக்கு நேர்மேலே 'வெகு விரைவில் வருகிறார்கள், தங்கத்தூசு இரட்டையர்கள்!' என்ற விளம்பரம் காணப்பட்டது. அவள் அடுத்து 'வில்லியம்மின் குச்சி செய்த மாயம்' என்ற ஷேவிங்க் விளம்பரத்திற்குக் கீழ் அமர்ந்தபோது, எனக்கு சிரிப்பு வந்து விட்டது. மூன்றாம் முறை, அப்பெண் உட்கார்ந்த இருக்கைக்கு மேலிருந்த 'டன்லப் ரப்பர் இவ்விபத்து நிகழாமல் நிச்சயம் தடுத்திருக்கும்!' என்ற விளம்பர வாசகத்தை கண்டவுடன், தாள முடியாமல் நான் சிரித்த பெருஞ்சிரிப்பு என்னை இங்கு கொண்டு வந்து நிறுத்தி விட்டது! "
அவ்வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது!!!
2 மறுமொழிகள்:
ஹி.. ஹி.. இத்த படிக்க சொல்லோ வுய்ந்து வுய்ந்து சிர்ச்சம்பா (நெஜம்மா! முட்டி காலு கூட காயமாயிடுச்சிபா)
நகைச்சுவை வலைப்பதிவுல இத்த மாறியே இன்னோன்னு கீதுபா, அதுவும் செம டமாஸு
ஹி.. ஹி..
Post a Comment